கட்சி அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டார் தளபதி விஜய்

கட்சி அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டார் தளபதி விஜய்
  • PublishedFebruary 2, 2024

நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலைகளை பார்த்து வரும் அவர் இன்று தன்னுடைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி விஜய் மக்கள் இயக்கம் இன்று தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியாக மாறி இருக்கிறது. தற்போது விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம், பிளவுவாத அரசியல் கலாச்சாரம் இடையில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஒரு மாற்றத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

எனக்கு எல்லாம் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி துவங்கப்பட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது.

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பான இடைப்பட்ட காலத்தில் எமது கட்சியின் தொண்டர்கள் அரசியல் மையப்படுத்தி தயார்படுத்தப்படுவார்கள். அதற்கான பணிகள் பொறுப்பானவர்கள் மூலம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *