இந்தியன் 2 – ரிலீஸ் தேதியோடு வெளியான சர்ப்ரைஸ் போஸ்டர்

இந்தியன் 2 – ரிலீஸ் தேதியோடு வெளியான சர்ப்ரைஸ் போஸ்டர்
  • PublishedMay 20, 2024

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப தாமதத்தின் காரணமாக ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் பற்றி கேள்வி எழுப்பி வந்தனர். ஆனாலும் மீடியாவில் ஜூலை மாதம் நிச்சயம் படம் வெளியாகும் என்ற செய்திகளும் கசிந்தது.

அதன்படி தற்போது பட குழு இந்தியன் தாத்தா எப்போது வருகிறார் என்ற அறிவிப்பை போஸ்டரோடு வெளியிட்டுள்ளது. அது மட்டும் இன்றி வரும் 22 ஆம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந்தியன் 2 உலக அளவில் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *