வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

வீரன் படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு இழைக்கப்பட்ட அநீதி!
  • PublishedMay 31, 2023

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வீரன் திரைப்படம் வரும் ஜுன் மாதம் 02 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

மரகத நாணயம் பட இயக்குனர் ஏஆர் சரவணன் இயக்கிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்  இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்தில் கதாநாயகியாக அதிரா ராஜ் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் வில்லனாக வினய் ராய் மற்றும் முனீஸ்காந்த் காளி வெங்கட் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பேசினார். அப்போது ஹிப்ஹாப் ஆதிக்கு வீரன் படத்தில் இப்படி ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவந்துள்ளது.

ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத ஆதி செய்தியாளர்களுக்கு தான் செம டோஸ் கொடுத்திருக்கிறார். அதாவது சமீபத்தில் தான் ஆதி டாக்டர் பட்டம் வாங்கிய நிலையில்  இந்த படத்தில் அதை அவருடையபெயருக்கு பின்னால் குறிப்பிடவே இல்லை.

இதனால் உங்களுக்கும் இயக்குனருக்கும் ஏதாவது பிரச்சனையா? என்று செய்தியாளர் ஆதியிடம் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஆதி  இந்த மாதிரி சர்ச்சையான கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை. நீங்களே புதிதாக ஏதாவது கிளப்பி விடாதீர்கள்.

படத்தில் இருக்கும் பிளஸ்சை மட்டும் பாருங்கள். படம் லீஸ் ஆகுவதற்கு முன்பே ஆப்படித்து விடாதீர்கள் என வெளுத்து வாங்கிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *