இரும்புக்கை மாயாவி எப்போது உருவாகும்? – மனம் திறந்த லோகேஷ்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு, தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்கவுள்ளார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மாநகரம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தனது முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலை தொடர்ச்சியாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது.
தனித்துவமான கதைய அம்சங்களை கொண்ட படங்களை இயக்கி அதை வெற்றி படங்களாக மாற்றி வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” மற்றும் “லியோ” ஆகிய நான்கு திரைப்படங்களும் மெகா ஹிட் திரைப்படங்களாக மாறியது. LCU யூனிவெர்ச்சுக்குள் வரப்போகும் படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது பட பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ் அவர்கள், ஒரு தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் “இரும்புக்கை மாயாவி” திரைப்படம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், அது தன் கனவு திரைப்படம் என்றும், ஆகையால் அதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் அண்மையில், தான் பத்து திரைப்படங்களை இயக்கிய பிறகு ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவருடைய கடைசி திரைப்படமாக “இரும்புக்கை மாயாவி” திரைப்படம் அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.