இவரால் தான் விஜய் குடும்பத்தில் பிரச்சினையா? : உண்மையை உடைத்த சந்திரசேகர்!

இவரால் தான் விஜய் குடும்பத்தில் பிரச்சினையா? : உண்மையை உடைத்த சந்திரசேகர்!
  • PublishedMay 23, 2023

தளபதி விஜய் கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். விஜய்யுடன் ஒரு படம் பண்ணுவதற்கு இயக்குனர்களும்,  தயாரிப்பாளர்களும் தவமாய் தவம் கிடைக்கின்றனர்.

இந்நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.  விஜய் இன்று தமிழக அரசியலில் சாதக சூழ்நிலையை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக மாறி இருக்கிறார்.

இந்தளவாக அவர் வளர்ச்சியடைவதற்கு உறுதுணையாக இருந்தது அவரது தந்தைதான். ஆனால் சமீபகாலமாக இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் இருந்து வருகிறது.

இதைப்பற்றி சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே விஜய்க்கு அறிவுரைகளை சொல்லி அடுத்தடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தது நான்தான். அது அவர் மீது கொண்ட அக்கறையால் நான் செய்தது.

ஆனால் விஜய்க்கு திருமணத்திற்குப் பிறகு இது பிடிக்கவில்லை. இதுதான் எங்கள் இருவரது சண்டைக்கும் காரணம் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் சந்திரசேகர். அவர் திருமணத்திற்கு பின்பு என்று குறிப்பிட்டு கூறுவதால் இவர்களுடைய பிரச்சனைக்கு காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா என்பது நன்றாகவே தெரிகிறது என சிலர் விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *