பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்? தீயாய் பரவும் செய்தி…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர்தான்? தீயாய் பரவும் செய்தி…
  • PublishedJanuary 13, 2024

தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7, இப்பொது நிறைவு பகுதிக்கு வந்துள்ளது.

முதலில் 18 போட்டியாளர்களுடன் துவங்கி, அதன் பிறகு 23 போட்டியாளர்களுடன் இரு வீடுகளைக் கொண்டு மிகவும் வித்தியாசமான மற்றும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இப்பொது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விஷ்ணு, மாயா, மணிச்சந்திரா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களாக தற்பொழுது தேர்வாகியுள்ளனர்.

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா அவர்கள் டைட்டில் வின்னராகி 50 லட்சம் ரூபாய் வென்றுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

நடன கலைஞர் மணிச்சந்திரா இரண்டாவது இடத்தையும், பிரபல நடிகை மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை அர்ச்சனாவை பொருத்தவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 28 வது நாளில் களமிறங்கியவர், அதே நேரத்தில் மணிச்சந்திரா மற்றும் மாயா ஆகிய இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் நாளிலிருந்தே பயணித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு மாயாவை பெரிய அளவில் பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு வலுவான போட்டியாளராகவே அவர் திகழ்ந்து வந்தார்.

இருப்பினும் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கிய அர்ச்சனா தற்பொழுது இந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறியுள்ளார் என்கின்ற தகவல் தற்பொழுது தீயாக பரவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் புகை பிடிப்பது போன்ற பல சர்ச்சைகளில் அர்ச்சனா அவர்கள் சிக்கி இருந்தாலும், மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று அவர் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதே நேரத்தில் வலுவான போட்டியாளராக திகழ்ந்து வந்த பொழுதும், மாயாவால் இரண்டாவது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *