சுகன்யா மறுமணம் செய்யப் போகிறாரா?

சுகன்யா மறுமணம் செய்யப் போகிறாரா?
  • PublishedMay 19, 2023

90களில்  இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு  ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையால் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சுகன்யா மறுமணம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் ‘எனக்கு மறுமணம் குறித்த எண்ணம் வந்ததில்லை.

தற்போது எனக்கு 51 வயதாகிவிட்டது. நாம் நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை குறித்து யோசிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *