மாநாடு படத்தில் முன்னதாக நடிக்க இருந்தவர் இவரா?

மாநாடு படத்தில் முன்னதாக நடிக்க இருந்தவர் இவரா?
  • PublishedMay 29, 2023

ஜெயம் ரவி கையில் டஜன் கணக்கில் படங்களை வைத்துள்ளார். நிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு படப்பிடிப்பில் ஜெயம் ரவி பிசியாக இருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தான். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிய நிறுவனங்களில் இருந்து ஜெயம் ரவிக்கு பட வாய்ப்பு வருகிறது.

ஆனால் ஜெயம் ரவி தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த போது ஒரு இயக்குனர் தாமாக முன்வந்து தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் ஜெயம் ரவி அப்போது மறுத்து விட்டாராம்.

அதாவது நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். அவரது படங்களும் தோல்வியை தழுவி வந்ததால் சிம்புவை வைத்து படமெடுக்க இயக்குனர்கள்,  தயாரிப்பாளர்கள் பயந்தனர். அந்தச் சமயத்தில் வெங்கட் பிரபு தான் மாநாடு என்ற பிளாக்பஸ்டர் படத்தை சிம்புக்கு கொடுத்தார்.

அதன் பிறகு சிம்புவின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. இதனால் தன்னிடம் இருந்த எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டு விட்டு இப்போது முழுவதுமாக படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் மாநாடு படத்திற்கு முதலில் வெங்கட் பிரபு சிம்புவை அணுகவில்லையாம்.

அதாவது ஜெயம் ரவியை தான் வெங்கட் பிரபு செலக்ட் செய்து வைத்திருந்தார். அப்போது ஜெயம் ரவி நான் ரொம்ப பிஸியாக இருப்பதாக கூறி வெங்கட் பிரபுவை மறுத்துவிட்டார். அதன் பிறகு தான் சிம்புவை மாநாடு படத்தில் நடிக்க வைத்து வெற்றி கொடுத்தார் வெங்கட் பிரபு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *