சந்திரமுகி 2 திரைப்படத்தின் கதை இதுதானா? : வெளியான சூப்பர் புகைப்படம்!

சந்திரமுகி 2 திரைப்படத்தின் கதை இதுதானா? : வெளியான சூப்பர் புகைப்படம்!
  • PublishedMay 29, 2023

பி வாசு இயக்கத்தில் ரஜினி,  ஜோதிகா,  நயன்தாரா,  பிரபு மற்றும் பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினியின் திரை வாழ்க்கையில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமை சந்திரமுகிக்கு உண்டு. இந்நிலையில் இயக்குனர் பி வாசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

ரஜினிக்கு எப்போதுமே தன்னுடைய படங்களில் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் அவரின் அனுமதியுடன் சந்திரமுகி 2வில் லாரன்ஸ் நடித்து வருகிறார்.

மேலும் கங்கனா ரனாவத்,  ராதிகா,  வடிவேலு போன்ற முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

chandramuki-2

இந்நிலையில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் அரசர் உடையில் உள்ள புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகி ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இதில் சந்திரமுகியின் காதல் காட்சிகள் மற்றும் வேட்டையனை பழி வாங்குவதற்கான காரணம் ஆகியவை வெளிவர இருக்கிறது. இதனால் சந்திரமுகி 2 படத்தில் இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் அப்போது உள்ள தொழில்நுட்பத்திலேயே கிராஃபிக்ஸ் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டிருந்த நிலையில்இ தற்போது மிக நுணுக்கமாக பல காட்சிகள் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *