விஜய்யை வழியனுப்ப வரும் பெரும் தலைகள்! ஆடியோ லாஞ்சில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

விஜய்யை வழியனுப்ப வரும் பெரும் தலைகள்! ஆடியோ லாஞ்சில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
  • PublishedNovember 25, 2025

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ளது.

இப்படத்தை எச்.வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கின்றனர்.

ஜன நாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே ஜன நாயகன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 27ஆம் திகதி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

விஜய்யின் கடைசி படம் என்பதால் அதன் இசை வெளியீட்டு விழாவை காண தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஆவலோடு இருக்க, திடீரென அதை மலேசியாவில் நடத்துவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதில் பல சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்.

இந்த இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் என்கிற பிரம்மாண்ட அரங்கத்தில் தான் நடைபெற உள்ளதாம். அந்த அரங்கத்தில் 85 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியுமாம். இதனால் அங்குள்ள தமிழர்கள் இந்த ஆடியோ லாஞ்சுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் அது ஆடியோ லான்ச் இல்லையாம், அதை தளபதி கச்சேரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த விழாவில் விஜய்யின் கெரியரில் சூப்பர் ஹிட் அடித்த 35 பாடல்களை அதன் ஒரிஜினல் பாடகர்களே பாட உள்ளார்களாம். இதனால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.

அதோடு அனிருத்தும் ஜன நாயகன் பட பாடல்களை தன்னுடைய குழுவினருடன் பாட இருக்கிறார். மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

இதனால் ஜன நாயகன் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *