சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த மக்கள் செல்வன்

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்த மக்கள் செல்வன்
  • PublishedNovember 25, 2025

சிம்புவின் 49-வது படமாக உருவாகும் அரசன் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அத்துடன் படத்தின் புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.

இந்த புரோமோ வீடியோ மூலம் இயக்குநர் நெல்சனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், அரசன் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி அரசன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் வட சென்னை திரைப்படத்தை இயக்கியபோது அதில் அமீர் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன்.

ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில், வட சென்னை யூனிவர்ஸில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி உள்ளதால், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *