அட… இவருக்கும் வயசாகிட்டு போல… இணையத்தில் வைரலாகும் ஜாக்கி சானின் புதிய புகைப்படம்

அட… இவருக்கும் வயசாகிட்டு போல… இணையத்தில் வைரலாகும் ஜாக்கி சானின் புதிய புகைப்படம்
  • PublishedMarch 15, 2024

ஊடகத்தின் ஆதிக்கம் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு நடிகர் தான் ஜாக்கி சான்.

அவருடைய படங்களில், இறுதியில் போடப்படும் அந்த Bloopers காட்சிகளுக்காகவே அவருடைய திரைப்படங்களை பெரிதும் ரசிக்கும் கூட்டம் இன்றளவும் இருந்து வருகிறது.

90களில் பிறந்த குழந்தைகளுக்கு சொந்தமான ஒரு விஷயம் என்றால் அது ஜாக்கிசான் என்றே கூறலாம் அதிலும் குறிப்பாக டிவியிலும் அவருடைய நாடகங்களை பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வந்தது.

கடந்த 1954 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்கின்ற இடத்தில் பிறந்தவர் தான் ஜாக்கி சான்.

முதலில் பிரபல நடிகர் புரூஸ்லீ அவர்களுடைய ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு மெல்ல மெல்ல ஹாலிவுட் உலகில் இவருடைய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

ஜாக்கி சானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற விருதுகளை அவருடைய சினிமா பயணத்தில் அவர் பெற்றிருந்தாலும் அவர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு மறக்க முடியாத ஒன்று என்று அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

1962 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜாக்கி சான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த 2024 ஆம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானை பார்த்து, “இவருக்கும் வயதாகுமோ” என்கின்ற ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *