“மறுபிறப்பு உண்மையாக இருந்தால்…” கண்ணீருடன் சுஜிதா போட்ட பதிவு

“மறுபிறப்பு உண்மையாக இருந்தால்…” கண்ணீருடன் சுஜிதா போட்ட பதிவு
  • PublishedMarch 15, 2024

மறைந்த இயக்குனரும் – நடிகருமான சூரிய கிரண் குறித்து, அவருடைய சகோதரியும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகையுமான சுஜிதா தனுஷ் உருக்கமாக பதிவு ஒன்று போட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர், என மிகவும் பிரபலமானவர் சூரிய கிரண்.

மாஸ்டர் சுரேஷ் என்கிற பெயரில் குழந்தை நட்சத்திரமாக சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பின்னர் சூரிய கிரண் என்கிற பெயரில் ‘சத்தியம்’ என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம், இயக்குனராக மாறினார்.

இவரை போலவே இவரின் சகோதரி சுஜிதாவும் ‘முந்தானை முடிச்சு’ உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வளர்ந்த பின்னர், ஹீரோக்களில் தங்கை வேடத்தில் நடித்து பிரபலமானார்.

வெள்ளித்திரையில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சீரியல் ஹீரோயினாக ஏகப்பட்ட தொடர்களில் நடித்தார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு நிறைவடைந்த ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலின் முதல் சீசனில் கதாநாயகியாக, தனம் என்கிற கேரக்டரில் நடித்து பல இல்லத்தரசிகளின் ஃபேவரட் நாயகியாக ஜொலித்தார்.

இந்நிலையில் இவரின் சகோதரர் சூரிய கிரண் மார்ச் 11-ஆம் தேதி மஞ்சள் காமாலை நோய் காரணமாக உயிரிழந்த நிலையில், சகோதரன் நினைவாக மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இந்த பதிவில், அண்ணா, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். “நீங்கள் என் அண்ணன் மட்டுமல்ல, என் தந்தையும், ஹீரோவாகவும் இருக்கிறீர்கள். உங்கள் திறமை மற்றும் பேச்சுக்காக நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். பல வழிகளில், உங்கள் இருப்பு சென்றடைந்தது. மறுபிறப்பு உண்மையாக இருந்தால், உங்கள் கனவுகள் மற்றும் சாதனைகள் அனைத்தும் புதிதாக தொடரட்டும். என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *