கல்யாணமாகி 4 மாசம்; கர்ப்பமாகி 7 மாசம்… வயிற்றில் குழந்தையோடு பரவசமடைந்த அமலா பால்

கல்யாணமாகி 4 மாசம்; கர்ப்பமாகி 7 மாசம்… வயிற்றில் குழந்தையோடு பரவசமடைந்த அமலா பால்
  • PublishedMarch 15, 2024

மலையாள நடிகையான அமலா பால் தமிழில் பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.

மைனா படத்தின் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யா ஜோடியாக சேட்டை என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

தமிழ் சினிமாவில் டாப் கியரில் சென்றுகொண்டிருந்த நடிகை அமலா பால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வந்த அமலா பாலுக்கு ஒரு கட்டத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் மனக்கசப்பு ஏற்பட்டது.

இதனால் இந்த காதல் ஜோடியின் திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த 2019-ம் ஆண்டு டாக்டர் ஒருவரை மறுமணம் செய்துகொண்ட நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக சிங்கிளாகவே வாழ்ந்து வந்த அமலா பால் கடந்தாண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்த கையோடு அவரை கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணமும் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் அமலா பால் வெளியிட்டார்.

திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது தான் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ள அமலா பால். திருமணத்துக்கு முன்னரே தான் கர்ப்பமானதையும் சூசகமாக உறுதி செய்திருக்கிறார்.

7-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் அமலா பால். கணவரோடு பப்பில் ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார், அதேபோல் தன்னுடைய காதல் மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெகத் தேசாய் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *