“சிம்பு அப்படிப்பட்டவர்… இன்னும் டச்ல இருக்கேன்” ஜோதிகா ஓபன் டாக்

“சிம்பு அப்படிப்பட்டவர்… இன்னும் டச்ல இருக்கேன்” ஜோதிகா ஓபன் டாக்
  • PublishedDecember 27, 2023

மன்மதன் படத்தில் விம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்த ஜோதிகா, சிம்பு குறித்து மனம் திறந்துள்ளார். அதில் சிம்பு தன்னைவிட சின்ன பையனாக இருந்தாலும் ரொம்ப புடிக்கும் என்பதோடு இன்னும் சில முக்கியமான சம்பவங்களையும் ஷேர் செய்துள்ளார்.

கோலிவுட் இளம் ஹீரோக்களில் சிம்பு அளவிற்கு வேறு எந்த நடிகருக்கும் மாஸ் கிடையாது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, தற்போது வேற லெவலில் சம்பவம் செய்து வருகிறார்.

மாநாடு படத்தில் கம்பேக் கொடுத்த சிம்பு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். தற்போது தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சிம்பு குறித்து நடிகை ஜோதிகா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மன்மதன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா. தன்னைவிட வயதில் சின்ன பையனாக இருந்தும் சிம்புவுடன் நடித்து டூயட்டும் பாடியிருந்தார். அதேபோல் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மன்மதன் படத்தின் போஸ்டரில் சிம்புவுடன் ஒன்றாக இருக்கும் க்யூட்டான போட்டோவை பற்றி ஜோதிகா மனம் திறந்துள்ளார்.

அதில் சிம்புவுடன் இருக்கும் போட்டோவை பார்த்ததும் மகிழ்ச்சியான ஜோதிகா, “சிம்பு என்னைவிட சின்ன பையன் தான்… நான் நடித்ததில் இளம் ஹீரோ சிம்பு… அவர் ரொம்பவே ஓபன் டைப்… அதனாலயே சிம்புவை தனக்கு ரொம்ப புடிக்கும்” என்றுள்ளார். மேலும் இப்போது வரை சிம்புவுடன் டச்சில் இருக்கிறேன் என ஜோதிகா கூறியுள்ளார்.

அதேபோல், சில்லுன்னு ஒரு காதல் படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியிருந்தார். அதன் பின்னர் இருவரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தோம்… அதில் ஜோடியாக இல்லை என்றாலும் சிம்புவுடன் ஒருசில காட்சிகளில் நடித்தது மறக்கவே முடியாது என ஜோதிகா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

சிம்பு குறித்து ஜோதிகா நெகிழ்ச்சியாக பேசியது ரசிகர்கள் மத்தியில் வைப் கொடுத்துள்ளது. இதனால் சிம்பு – ஜோதிகா காம்போ மீண்டும் இணைந்து நடிக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *