நியூயோர்க்கில் ஓடியது யாருடன்? வைரலான வீடியோவின் உண்மையை கூறினார் விஷால்

நியூயோர்க்கில் ஓடியது யாருடன்? வைரலான வீடியோவின்  உண்மையை கூறினார் விஷால்
  • PublishedDecember 27, 2023

விஷால், வெகேஷனுக்காக… நியூயோர்க் சென்றுள்ள நிலையில் அங்கு ஒரு பெண்ணுடன் நடந்து செல்ல, யாரோ சிலர் அவரை கண்டுபிடித்து வீடியோ எடுப்பது போன்றும்… அதை நோட் செய்த பின்னர் விஷால் மூஞ்சை மறைத்து கொண்டு ஓடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.

ரசிகர்க பலர் இது உண்மையான விஷால் தானா? என சந்தேகமாக கேள்வி எழுப்பி வந்த நிலையில்… அந்த பெண் தான் விஷாலின் புதிய காதலியா? என்கிற கேள்விகளும் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டன.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து விஷால் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,

“மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். இதில் பாதி உண்மை உள்ளது. நான் இப்போது நியூயார்க்கில் இருக்கிறேன். இது எனது உறவினர்களுடன் நான் வழக்கமாக வரும் இடம். வருடத்திற்கு ஒருமுறை இங்கு என்னுடைய உறவினர்களுடன் வருவதை வழக்கமாக வைத்துள்ளேன்.

இந்த வீடியோவில் பாதி உண்மை இல்லை. என்னுடைய உறவினர்கள் குறும்புத்தனம், செய்வதற்காக கிறிஸ்துமஸ் தினத்தில் விளையாட முடிவுசெய்து, இந்த வீடியோவை எடுத்தனர். இந்த வீடியோ பற்றி பலர் துப்பறியும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது விளையாட்டாக எடுக்கப்பட்ட வீடியோ என்று இந்த வைரல் வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *