ஜோதிகாவை பலமுறை திட்டி கதறி அழவைத்த இயக்குனர்.. கடைசில இப்படி நடந்திரிச்சே…

ஜோதிகாவை பலமுறை திட்டி கதறி அழவைத்த இயக்குனர்.. கடைசில இப்படி நடந்திரிச்சே…
  • PublishedDecember 28, 2023

நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி குடும்பம், குழந்தை என்று செட்டிலாகினார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

ஜோதிகா ஆரம்பத்தில் அறிமுகமாகிய போது இயக்குனர் ஒருவரிடம் தொடர்ந்து திட்டு வாங்கி கதறி அழுத சம்பவம் நடந்துள்ளதாக இயக்குனர் மணி பாரதி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட அவர் நடிகை ஜோதிகா பற்றிய சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் நடித்த ஜோதிகா இந்த அளவிற்கு வருவார் என்று நம்பிக்கை இருந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், அது சந்தேகம் தான் இருந்தது. காதலுக்கு மரியாதை படத்தின் இந்தி ரீமேக்கில் ஜோதிகா தான் அறிமுகமாகி நடித்திருந்தார். அந்த படம் பிளாப் படமானது. நக்மாவின் தங்கை என்ற அறிமுகத்தை வைத்து தான் இங்கே அறிமுகம் செய்தார்கள்.

பூவெல்லாம் கேட்டுப்பார் படம் பெரிதாக ஓடுமா என்று நினைக்கவில்லை. மதில் மேல் பூனை போன்ற கதையை தான் இயக்குனர் வசந்த் எடுப்பார்.

அதில் எங்களுக்கு சந்தேகம் தான் வந்தது. அப்படி ஆரம்பிக்கும் போது சூர்யாவுக்கு அது இரண்டாம் படம், ஜோதிகா அறிமுகமாகிறார்கள். ஷூட்டிங்கில் சூர்யாவை எப்படி வசந்த் சார் திட்டுவாரோ அதேபோல் தான் ஜோதிகாவையும் திட்டுவார்.

பயங்கரமாக திட்டுவார், அதனால் கோபித்துக்கொண்டு மூளையில் உட்கார்ந்து அழ ஆர்மபித்துவிடுவார் ஜோதிகா.

அதை பார்த்த அம்மா, தயாரிப்பாளர் சுப்புவை வரவழைத்து எங்களுக்கு இந்த படமே வேண்டாம், என் பொண்ணு (நக்மா) சங்கர் இயக்கத்தில் நடித்திருக்கிறாள், அவர் பெரிய டைரக்டர், அவர் கூட இப்படி திட்டமாட்டார், இவர் இப்படி திட்ராரு, இன்றே டிக்கெட் போடுங்க நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறுவார். பின் அவர்களை சமாதானப்படுத்தி ஜோதிகாவை நடிக்க வைத்தோம்.

இதேபோல் பலமுறை வசந்த் சாரிடம் திட்டுவாங்கி நடித்தார்கள். ஆனால், சூர்யாவுக்கு ஜோதிகா மனைவி ஆவார்கள் என்று நினைக்கவில்லை என்று இயக்குனர் மணி பாரதி தெரிவித்துள்ளார். அப்படத்தில் காதல் வரவில்லை, காக்க காக்க படத்தில் தான் காதல் வந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

jy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *