‘நான்தான் சைத்தான்.. ‘மாதவன் – ஜோதிகா நடிக்கும் சைத்தான் படத்தின் ரிலீஸ் எப்ப தெரியுமா?

‘நான்தான் சைத்தான்.. ‘மாதவன் – ஜோதிகா நடிக்கும் சைத்தான் படத்தின் ரிலீஸ் எப்ப தெரியுமா?
  • PublishedFebruary 20, 2024

டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் இணைந்து நடித்த ஜோடி மாதவன் மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலக்கட்டங்களில் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரின் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் சைத்தான்.

இந்திப் படங்களில் நடித்தே தன்னுடைய அறிமுகத்தை துவங்கியவர் நடிகை ஜோதிகா. அவர் தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் சைத்தான் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் அஜய் தேவ்கனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பிளாக் மேஜிக் உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் கன்பத் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள விகாஸ் பால் இயக்கத்தில் ஹாரர் திரில்லராக சைத்தான் படம் ரிலீசாகவுள்ளது.

படத்தின் டீசர் கடந்த மாதத்தில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

குஜராத்தி மொழியில் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்த வாஷ் என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது. பில்லி, சூனியம் என்று கூறப்படும் பிளாக் மேஜிக்கை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

படம் வரும் மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *