துணிவு பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

துணிவு பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்
  • PublishedFebruary 20, 2024

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) தனது 59ஆவது வயதில் காலமானார்.

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தி சீரியல்களில் பிரபலமானவர் ரித்துராஜ் சிங். பாலிவுட்டிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி (Pancreatic disease) பாதிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகள் பிரபலமாக இருந்து வந்த ரித்துராஜ் சிங் திடீரென உயிரிழந்தது பல பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சோஷியல் மீடியா மூலம் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *