இன்னும் ஓய்ந்தபாடில்லை இவர்களின் விவாகரத்து செய்தி.. சமந்தாவின் புதிய அதிர்ச்சி நியுஸ்

இன்னும் ஓய்ந்தபாடில்லை இவர்களின் விவாகரத்து செய்தி.. சமந்தாவின் புதிய அதிர்ச்சி நியுஸ்
  • PublishedFebruary 20, 2024

சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா சினிமாவுக்கு வந்ததுடன் இல்லாமல் தெலுங்கு உலகின் பெரிய பணக்கார குடும்பம் ஆன நாகார்ஜூன் குடும்பத்தில் மருமகளானது பெரிய ஆச்சரியமான விஷயம் தான்.

ஆனால் அந்த குடும்பத்தையே உதறித் தள்ளி வெளியே வந்த பிறகும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது தான் ஆச்சரியம்.

நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு தான் சமந்தா தன்னுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்திய சமந்தா, ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் இளம் ஹீரோயின்களை நடுநடுங்க வைத்தது.

பின்னர் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது, ஆனாலும் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு, எனக்கு எண்டே இல்லை என நிரூபித்தார்.

இந்த நிலையில் அவரை மையோசைட்டிஸ் எனும் விசித்திர நோய் தாக்கியது.

வெளிநாட்டு சிகிச்சைக்காக பிரேக் எடுத்திருந்த சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் தான் ஒரு ஹெல்த் பாட்கேஸ்ட் தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து இதன் மூலம் தன்னுடைய ரசிகர்களிடம் பேசி வரும் சமந்தா இப்போது சமீபத்தில் நாக சைதன்யாவை பிரிந்த வருடம் தனக்கு எப்படிப்பட்ட வருடமாக இருந்தது என்பதை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த வருடம் தனக்கு ரொம்பவும் கடினமாக இருந்ததாகவும், தன்னுடைய நண்பர் ஒருவருடன் மும்பைக்கு செல்லும் பொழுது இப்போதுதான் நான் நிம்மதியாக உணர்கிறேன், என்னால் நன்றாக சுவாசிக்க முடிகிறது, இனி என் வேலைகளில் நன்றாக கவனம் செலுத்துவேன் என்று சொன்னது தனக்கு ஞாபகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் அந்த ஒரு வருடம் அவருக்கு நிம்மதி மற்றும் அமைதி இல்லாமல் இருந்ததாகவும், சரியாக தூங்கியது கூட இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்பு ரசிகர்களிடம் பேசும் பொழுது சமந்தா தன்னுடைய விருப்பு வெறுப்புகள் எது என்று தெரிந்து கொள்ளாமல் இருந்தது தான் தன் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறு என பேசி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *