ரீ ரிலீஸாக இருக்கும் கமல் படம் : டிசிபி ராகவனை மறக்க முடியுமா?

ரீ ரிலீஸாக இருக்கும் கமல் படம் : டிசிபி ராகவனை மறக்க முடியுமா?
  • PublishedMay 22, 2023

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கி இருக்கும் ஆண்டவர் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் தயாராகி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க அவருடைய நடிப்பில் 16 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு படம் தற்போது ரீ ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது. அண்மைக்காலமாகவே இதுபோன்ற ரீ ரிலீஸ் படங்கள் வெளிவருவது அதிகமாகிவிட்டது.

இந்நிலையில்,   கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்,  ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன்படி இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மெருகூட்டப்படும் இப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

டிசிபி ராகவன் என்னும் கேரக்டரில் நடித்திருந்த கமல் இப்படத்தின் மூலம் பலரையும் மிரட்டி இருப்பார். அதிலும் சைக்கோ கொலைகாரர்களை கண்டுபிடிக்கும் யுக்தி,  மனைவியின் இழப்பு, ஜோதிகா உடனான காதல் என அவருடைய கேரக்டர் வெறித்தனமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *