தலை சுற்ற வைக்கும் மோகன் லாலின் சொத்து மதிப்பு!

தலை சுற்ற வைக்கும் மோகன் லாலின் சொத்து மதிப்பு!
  • PublishedMay 22, 2023

மோலிவுட்டின் ராக் ஸ்டார் ஆக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்களுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமல்ல ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.

20 வயதில் சினிமா பயணத்தை ஆரம்பித்த அவர், தன்னுடைய 63 வயதிலும் இளம் நடிகர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மோகன் லாலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. இவர் இன்றும் சம்பளமாக ஒரு படத்திற்கு 15 கோடி மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இவரைப் போலவே இவரது மகனும் மகன் பிரணவ்-வும் தற்போது சினிமாவிற்கு கதாநாயகனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர் சினிமாவில் இத்தனை வருடங்களாக பல கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்.

திருவனந்தபுரத்தில் இவருக்கு ஒரு பெரிய வீடுள்ளது. இதைத் தவிர சுமார் 50 ஏக்கர் நிலமும் கொச்சியில் வாங்கி போட்டு இருக்கிறார். இவருக்கு 30 கோடி மதிப்புள்ள கார்கள் உள்ளது.

கிட்டத்தட்ட தன்னுடைய 43 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவர் சம்பாதித்த பணத்தை எல்லாம் சொத்துக்களாகத்தான் வாங்கி வைத்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி,  விளம்பரம் என இவருக்கு ஆண்டிற்கு 50 கோடி வரை சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. மொத்தமாக மோகன்லாலுக்கு ஒட்டுமொத்தமாக 450 கோடி சொத்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *