“இனிமேல்…” அப்படித்தான்… லோகேஷ் கனகராஜை ஹீரோவாக்கிய கமல்ஹாசன்

“இனிமேல்…” அப்படித்தான்… லோகேஷ் கனகராஜை ஹீரோவாக்கிய கமல்ஹாசன்
  • PublishedMarch 19, 2024

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருகிறார். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தையும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இதுதவிர தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர் 48 படத்தையும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரித்துள்ள மற்றொரு புராஜெக்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது. அந்த புராஜெக்டில் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இணைந்து பணியாற்றியதை மட்டும் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அந்த அப்டேட்டின் பின்னணி பற்றி விரிவாக விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி இனிமேல் என்பது ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ள ஒரு சுயாதீன இசைப்பாடலாம்.

இந்த பாடலில் ஹீரோவாக நடித்திருப்பது லோகேஷ் கனகராஜ் தானாம். அதுமட்டுமின்றி இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் தான் எழுதி இருக்கிறார். இப்பாடல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *