சரியான கம்பேக் கொடுக்கும் சமந்தா… இனி கோடியில் தான் சம்பளம்

சரியான கம்பேக் கொடுக்கும் சமந்தா… இனி கோடியில் தான் சம்பளம்
  • PublishedMarch 19, 2024

தெலுங்கில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு வர்ஷனாக எடுக்கப்பட்ட ‘Ye Maaya Chesave’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.

இதைத்தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் விஜய், தனுஷ், சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்த நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்.

திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, சாமர்த்தியமாக குடும்பத்தையும் – சினிமா கேரியரையும் பேலன்ஸ் செய்து கொண்டு சென்ற நிலையில், யார் கண் பட்டதோ… சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு திருமண முறிவு வரை கொண்டு சென்றது.

பின்னர் இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர். இந்த தகவல் பல ரசிகர்களை பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாக சைதன்யாவின் நினைவுகளில் இருந்து வெளியே வர தோழிகளுடன் ஆன்மீக யாத்திரை சென்று வந்த சமந்தா, மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

அப்போதுதான் திடீரென மயோசிட்டிஸ் எனப்படும் அரிய வகை தசை அழிச்சி நோயால் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் எழுந்து கூட நடக்க முடியாமல் இருந்த சமந்தா, பின்னர் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

மேலும் மயோசிட்டிசில் இருந்து முழுமையாக வெளியே வர குட்டி பிரேக் எடுத்து கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.

இவர் நடிப்பில், கடைசியாக கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ‘குஷி’ படம் தான் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அது மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

மீண்டும் தன்னுடைய கேரியரில் பிஸியாகி உள்ள சமந்தா, அடிக்கடி தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சில விளம்பர படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விளம்பரங்களில் நடிக்க 1.5 கோடி முதல் ரூபாய் முதல் 2 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் திரைப்படங்களில் நடிக்க 7 கோடி முதல் 8 கோடி வரையம், வெப்சீரிஸ் என்றால் 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் என லிஸ்ட் போட்டு கேட்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *