“விஜய்யை அரசியலுக்கு வரச்சொன்னதே நான் தான்…” கமல் விஷேட அறிவிப்பு
விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய்.
அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார்.
இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது அரசியல் வருகையை அறிவித்தார். அதன்படி கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் தொடங்கிவிட்டன. விஜய்யின் இந்த அதிரடி முடிவின் காரணமாக விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன்,
“நடிப்பிலிருந்து ஒதுங்கி விஜய் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட முடிவு. விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னது நான்தான். அவரை அரசியலுக்கு முதன்முதலாக வரவேற்றதும் நான்தான்” என்றார்.
கமல் ஹாசனின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. முக்கியமாக அரசியலுக்கு வர சொன்னதே தான் என்று கமல் ஹாசன் சொல்லியிருப்பதால் ஒருவேளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமும், மக்கள் நீதி மய்யமும் கூட்டணி அமைத்து போட்டியிடுமோ என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.