ஓடிடி தளங்களின் வளர்ச்சி பற்றி முன்பே கணித்த கமல்!
கொரோனா காலகட்டத்தில் சினிமாதுறையில் ஏற்பட்ட மிகப் பெரிய புரட்சிதான் இந்த ஓடிடி தளங்களின் ஆக்கிரமிப்பு. இப்போது ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட சில படங்களும் ஓடிடி தளத்தில் ரீ ரிலிஸ் ஆகுகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானால் கமலுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது கமலிடம் ஓடிடி நிறுவனங்கள் பற்றி கேட்கப்பட்டது. இந்நிறுவனங்கள் பற்றி உலக நாயகன் அன்றே வியூகம் செய்து வைத்துள்ளார். அதாவது ஓடிடியின் புரட்சி எல்லோருக்கும் முன்பாக நான் அறிந்தேன்.
ஆனால் அப்போது நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இப்போது அதை கண்முன்னே எல்லாரும் பார்க்க முடிகிறது. சினிமாவில் வரும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
மேலும் சினிமா ரசிகனாக என்னால் பார்க்க விரும்பும் படங்களை நான் எடுக்க முயற்சிக்கிறேன். சில சமயங்களில் நானே அதில் நடிக்கிறேன். ஆனால் இப்போது அவற்றில் நடிப்பதை காட்டிலும் தயாரிப்பில் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.