இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கமல் : நடிகையின் கண்டிஷனால் வந்த சோகம்!

இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கமல் : நடிகையின் கண்டிஷனால் வந்த சோகம்!
  • PublishedMay 20, 2023

நடிகர் கமல் தற்போது  ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் சிம்புவின் 48 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 25 கோடி ரூபாய் சிம்புவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தபடத்தில்  சிம்புக்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் கமலின் பேராசையால் வேறு ஒரு முடிவுக்கு போய்விட்டார். அதாவது, கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக பொலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.  ஆனால் அவரோ பல்வேறு கண்டிஷன்களை போட்டுள்ளார்.

தீபிகா படுகோன் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன். அத்துடன் அந்த தளத்தில் இருக்கும் எல்லா ரூம்களையும் எனக்கு புக் பண்ணி விட வேண்டும் என்று தடாலடியாக கண்டிஷன் போட்டிருக்கிறார்.

மேலும் என்கூட 5 முதல் 6 பேர் வருவார்கள் அவர்களுக்கும் நீங்கள் சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட கமல் ஆடிபோய்விட்டார் என்றே கூறவேண்டும். இதனாலேயே அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டாராம்.

இருக்கிறதை விட்டுவிட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கடைசியில் கெதி. இப்பொழுது மறுபடியும் இவர் கீர்த்தி சுரேஷ் இடம் போய் நிற்கும் நிலைமை வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *