கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
  • PublishedJanuary 17, 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகமுக்கியமான நபர் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியை மக்கள் ஆர்வமாக பார்க்க துவங்கியதே கமல் ஹாசனால் தான்.

இவருடைய முகம் தான் இந்த நிகழ்ச்சியின் செல்லிங் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனில் துவங்கி சமீபத்தில் முடிவடைந்த 7வது சீசன் வரை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

நடந்து முடிந்த கடைசி சீசனில் இவர் மீது சில சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கமல் ஹாசன் கையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தூசியை தட்டிவிடுவது போல் தட்டிவிட்டு விட்டார்.

இந்நிலையில் வெற்றிகரமாக பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன், இந்த நிகழ்ச்சிக்காக வாங்கி சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் கூறுகிறது.

இந்திய பிக் பாஸ் வரலாற்றில் சல்மான் கானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நபராக கமல் ஹாசன் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *