கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் “மிஷன்”

கடுமையான போட்டிகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் “மிஷன்”
  • PublishedJanuary 17, 2024

அருண் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர். ஆக்ஷன் ஹீரோ என ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் அருண் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே.

இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அயலான் மற்றும் கேப்டன் மில்லர் என இரு படங்களுக்கு இடையே கடுமையான பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் மிஷன் திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில், ஐந்து நாட்கள் முடிவில் உலகளவில் ரூ. 9 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

இனி வரும் அடுத்தடுத்த நாட்களிலும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *