கங்குவா படத்தின் பிரபலம் திடீர் மரணம்! அதிர்ச்சியில் படக்குழு
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் பணியாற்றிய பிரபலத்தின் மரணம் படக்குழுவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கங்குவா படத்தின் படத்தொகுப்பாளார் நிஷாத் யூசுப் இன்று காலை மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 43.
நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள அவரது அபார்ட்மெண்ட்டில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.
நிஷாத் யூசுப் கங்குவா மட்டுமின்றி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புதுப்படத்திற்கும் படத்தொகுப்பாளராக கமிட் ஆகி இருந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
அவரது திடீர் மரணம் கங்குவா படக்குழுவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.