விக்கி – நயன் வீடியோவுக்கு விடிவு பிறந்தது… ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

விக்கி – நயன் வீடியோவுக்கு விடிவு பிறந்தது… ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்
  • PublishedOctober 30, 2024

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க கதை கேட்கும் போது விக்கியை சந்தித்த நயன்தாராவுக்கு முதல் சந்திப்பிலேயே அவர்மீது கிரஷ் வந்துவிட்டது. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி நாளடைவில் அது காதலாகவும் மாறியது.

பின்னர் அரசல் புரசலாக செய்திகள் லீக் ஆனதும் விருது விழா ஒன்று விக்னேஷ் சிவன் உடன் ஜோடியாக வந்து, தங்கள் காதலை உறுதி செய்தார் நயன்தாரா. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 10ந் தேதி திருமணம் நடைபெற்றது.

https://www.instagram.com/p/DBvKON7T9zE/

இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, அட்லீ, ஷாலினி அஜித்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டனர்.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் விக்கி – நயன் ஜோடியின் திருமணம் நடைபெற்றது. இதற்காக கடற்கரையில் கண்ணாடி மாளிகை போன்ற செட் அமைக்கப்பட்டு அதில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஏனெனில் இந்த திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

அதன்பேரில் விக்கி – நயன் ஜோடியின் திருமணத்தை ‘நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடைல்’ என்கிற பெயரில் டாக்குமெண்ட்ரி படமாக எடுத்துள்ளது நெட்பிளிக்ஸ். இந்த டாக்குமெண்ட்ரி படத்தை கெளதம் மேனன் தான் இயக்கி உள்ளார்.

நயன்தாராவின் திருமணத்தை படமாக்கும் உரிமையை ரூ.25 கோடி செலவழித்து கைப்பற்றி இருந்தது நெட்பிளிக்ஸ். இருப்பினும் சில காரணங்களால் இந்த திருமண வீடியோவை வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.

இந்த நிலையில், நயன்தாராவின் திருமணம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அவரின் திருமண வீடியோவை வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 18-ந் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் அன்று நயனின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நயன்தாராவுக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் இந்த வீடியோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *