பேட்ட படத்திற்கு பிறகு ரசிகர்களை அதிகம் கவரக்கூடிய படமாக ரெட்ரோ…கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ரெட்ரோ. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
ஆக்ஷன், எமோஷனல் கலந்த 1990களில் நடக்கும் கதையில் இந்த படம் உருவாகி இருப்பதாக கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
மேலும் இந்த படத்தில் சூர்யாவை, கேங்ஸ்டராக மட்டுமின்றி உருக்கமாக காதலிக்கும் காட்சிகளிலும் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். அதோடு நகைச்சுவை காட்சிகளும் இந்த படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் நான் இயக்கிய பேட்ட படத்திற்கு பிறகு இந்த படம் ரசிகர்களை அதிகம் கவரக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.