கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமண பத்திரிக்கை லீக்கானது
திருமண நாள் நெருங்கி வருவதால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் ‘கசிந்துள்ளது’.
பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த அழைப்பிதழில்… கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான ஜி. சுரேஷ் குமார் மற்றும் மேனகா சுரேஷ் ஆகியோரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, ‘டிசம்பர் மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது நிஜம் தான், கோவாவில் திருமணம் நடக்கிறது என முதல் முறையாக அதிகார பூர்வமாக அறிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று தான் கீர்த்தியின் திருமணம் நடைபெற உள்ளது. கீர்த்தி தன்னுடைய பால்ய நண்பரான, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டிலை தான் மணக்க உள்ளார். அவர் கொச்சியிலும் சில ரெஸ்டாரன்டுகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.