“அந்த 45 நிமிஷம் சும்மா தெறிக்கும்..” லால் சலாமில் பாட்ஷாவாக மாறிய ரஜினி

“அந்த 45 நிமிஷம் சும்மா தெறிக்கும்..” லால் சலாமில் பாட்ஷாவாக மாறிய ரஜினி
  • PublishedFebruary 8, 2024

ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். மகளுக்காக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆக்‌ஷன் ஜானரில் கமர்சியல் மூவியாக உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள லால் சலாம் படத்துக்கு முதல் விமர்சனமே பாசிட்டிவாக கிடைத்துள்ளது.

சிறிய கிராமத்தை கதைகளமாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் போட்டியில் அடிக்கடி நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கே சிலர் மத அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர்.

இவர்கள் பிரச்சினையை வைத்து அந்த ஊரில் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலவரத்தை நடத்தவும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த கிராமம் முழுவதும் மத ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்கிறது.

இதனையறிந்து மும்பையில் டானாக வலம் வரும் மொய்தீன் பாய், தனது சொந்த ஊருக்கு வந்து எல்லா பிரச்சினைகளையும் சரி செய்கிறார். ஆரம்பத்தில் சமாதானமாக பேசிப் பார்க்கும் மொய்தீன் பாய் பின்னர் பாட்ஷா ஸ்டைலில் ஆக்‌ஷனில் வில்லன்களை துரத்தி அடிக்கிறார். அதன் பின்னர் அந்த கிராம மக்கள் எப்படி மதங்களை கடந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பது தான் லால் சலாம் படத்தின் கதையாம்.

முதல் பாதியில் பெரிதாக கவனம் ஈர்க்காத லால் சலாம், இரண்டாம் பாதியில் ரஜினியின் வருகைக்குப் பின்னர் அதகளமாக இருக்கிறதாம். முதல் 10 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே ரஜினியின் போர்ஷன் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் 45 நிமிடங்களுக்கும் அதிகமாகவே ரஜினியின் காட்சிகள் இருக்கின்றன.

இதனால் இரண்டாம் பாதியில் மொய்தீன் பாய் சாம்ராஜ்யம் தான் பட்டாசாக தெறிக்குதாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளதாம்.

சில காட்சிகளில் கிரிக்கெட் போட்டியை லைவாக பார்த்த அனுபவம் கிடைக்கும் என முதல் விமர்சனத்தில் இருந்து தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மேக்கிங், வசனங்கள் லால் சலாம் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளதாம்.

அதேபோல் பாடல்களில் சொதப்பிவிட்ட ஏஆர் ரஹ்மான், பின்னணி இசையில் மிரட்டியுள்ளாராம். முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏஆர் ரஹ்மான் போட்டுள்ள பிஜிஎம் ஒவ்வொன்றும் தியேட்டரில் விசில் பறக்கும் என சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக லால் சலாம் பக்கா கமர்சியல் ஜானரில் ரஜினி ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் லால் சலாம் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வசூல் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *