விஜய்யின் TVK பெயரால் வெடித்தது சர்ச்சை

விஜய்யின் TVK பெயரால் வெடித்தது சர்ச்சை
  • PublishedFebruary 8, 2024

நடிகர் விஜய், சில படங்களில் நடித்துவிட்டு தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று அறிக்கை வெளியிட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவித்தாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை சுருக்கமாக TVK என்று பயன்படுத்த கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்.

தமிழக வாழ்வுரிமை கட்சியை TVK என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். விஜய்யின் கட்சி பெயரை TVK என்று வைத்தால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *