சூப்பர் ஸ்டாருக்கு அடிக்கடி போன் செய்த லைகா நிறுவனம் : ஒற்றைவார்த்தையில் பதிலளித்த ரஜினி!
லைகா நிறுவனம் வரிமான வரி சோதனையை தொடர்ந்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவித்து வருகிறது. இது ஒருபுறம இருக்க அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் இழுப்பறியில் இருக்கிறது.
இந்நிலையில், ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன் தயாரிக்க இருக்கிறார்.
ஏற்கனவே உள்ள பிரச்சினைகளால் அதனால் எங்கு ரஜினியின் 171-வது படம் தங்களது கையை விட்டு போய்விடுமோ என்ற பீதியில் லைக்கா நிறுவனம் தங்களது சூழ்நிலையை அவ்வப்போது சூப்பர் ஸ்டாருக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனே ரஜினி ‘எல்லா பிரச்சினையும் முடித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாக இருக்கிறேன்’ என லைக்காவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.