”சாமி வரம் கொடுத்தாச்சு, ஆனால் பூசாரி தலை தப்பாது போலேயே” : விஜயால் வெங்கட் பிரபுவிற்கு வந்த சோதனை!

”சாமி வரம் கொடுத்தாச்சு, ஆனால் பூசாரி தலை தப்பாது போலேயே” : விஜயால் வெங்கட் பிரபுவிற்கு வந்த சோதனை!
  • PublishedJune 16, 2023

விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தளபதி 68 திரைப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்திற்கு முன்பு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டு பின்னர், அந்த முடிவு மாற்றப்பட்டது. இதன்படி தற்போது யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே லியோ படத்தின் பிசினஸ் இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ரிலீசுக்கு முன்னரே கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் சிறு விடயம் கூட வெளியே கசிந்துவிடக் கூடாது என விஜய் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

காரணம் முன்னதாக வெளியான வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக்கொடுக்கவில்லை. இதற்கு காரணம் அந்த படத்தின் சில காட்சிகள், விடயங்கள் ரிலீசுக்கு முன்னமே கசிந்ததுதான். ஆகவே இந்த விடயத்தில் விஜய் கராராக இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *