கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி சங்கர் : சுடசுட வௌியான சூப்பர் தகவல்!

கருநாகத்துடன் இணையும் பிரியா பவானி சங்கர் : சுடசுட வௌியான சூப்பர் தகவல்!
  • PublishedJune 16, 2023

சீரியல் நடிகையாக இருந்து தற்போது டாப் நடிகைகளுக்கு எல்லாம் தண்ணி காட்டிக் கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். கைவசமாக அதிக படங்களை கொண்டுள்ள பிரியா பாவானி சங்கர் அண்மையில் எஸ்.ஜே.சூரியாவுடன் இணைந்து பொம்மை படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது கருநாகத்துடன் ஜோடி போட தயாராகியுள்ளார்.  கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக விஷாலை கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கரை கதாநாயகியாகவும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது.

சில வருடங்களாகவே பணமோசடி,  இயக்குனருடன் தகராறு,  உடல் நலக்குறைவு என விஷாலுக்கு போதாத காலமாக இருக்கிறது.

இதனால் வேற எந்த வம்புக்கும் போகாமல் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று விஷால் இப்போது நடிப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக இவருடைய மேனேஜரை கூட மாற்றி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *