GOAT படத்தின் கதை இதுதானா? லீக்கானது ரகசியம்… அதிர்ச்சியில் படக்குழு

GOAT படத்தின் கதை இதுதானா? லீக்கானது ரகசியம்… அதிர்ச்சியில் படக்குழு
  • PublishedJune 19, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்து வரும் கோட் திரைப்படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், பார்வதி நாயர், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கோட் படத்தின் கதையே இணையத்தில் கசிந்துள்ளது. முன்னதாக இது டைம் டிராவல் கதை என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கதை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கவைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் விஜய்யின் கோட் பட கதை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புழுயுவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *