பழம்பெரும் நடிகர் சரத் பாபுவின் உடல்நிலைக் கவலைக்கிடம்!
பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான சரத்பாபு விரைவில் குணமடைந்து நலம்பெற பிரபலங்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமீபத்திய அறிக்கைகளின்படி உடல்நலக்கோளாறு காரணமாக சரத்பாபுவை ஹைதராபாத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் சற்று கவலைக்குரிய உடல் நலத்தில் இருந்து உடல்நலனில் தேறி வருவதாக முடிவுகளைக் காட்டுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எதுவும் கூறவில்லை.
1971ஆம் ஆண்டு கே பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் மூலம் திரையில் அறிமுகமான சரத்பாபு, அண்ணாமலை, முத்து, பாபா, புதிய கீதை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.