விடாமுயற்சிக்காக சம்பளத்தை கொட்டிக் கொடுக்கும் லைகா நிறுவனம்!

விடாமுயற்சிக்காக சம்பளத்தை கொட்டிக் கொடுக்கும் லைகா நிறுவனம்!
  • PublishedMay 2, 2023

ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் அஜித்தினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகியது.

இதன்படி இந்த படத்திற்கு விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  மேலும் லைக்கா பிரம்மாண்டமாக விடாமுயற்சி படத்தை தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக போனி கபூர் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்களில் அஜித் நடித்திருந்தார்.

முதலாவதாக இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. அப்போது என்ன சம்பளம் பேசப்பட்டதோ அதை தான் மூன்று படங்களுக்கு அஜித் வாங்கி இருந்தார்.

ஆனால் லைகா நிறுவனம் அஜித்திற்கு,   105 கோடி சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் அஜித்தின் அடுத்தடுத்த படங்களில் இன்னும் சம்பளம் அதிகமாக உள்ளது. ஆகையால் சம்பள விஷயத்தில் இனி அஜித்துக்கு ஏறுமுகம் தான்.

மேலும் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் விஜய் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக அஜித் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *