ஏகே 62 பதிலாக புதிய படத்தை முன்மொழிந்த லைக்கா நிறுவனம்?

ஏகே 62 பதிலாக புதிய படத்தை முன்மொழிந்த லைக்கா நிறுவனம்?
  • PublishedApril 4, 2023

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இரசிகர்கள் காத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும், சில குளறுபடிகள் காரணமாக இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

முதலில் இந்த ஏகே62 என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த படம் மகிழ்திருமேனியிடம் கொடுக்கப்பட்டது. இந்த கதையில் மகிழ் திருமேனி அஜித்திற்கு ஏற்றமாதி மாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஏகே 62 படத்தை எடுப்பதாக அறிவித்த லைக்கா நிறுவனம் மகிழ்திருமேனியிடம் ஒரு கொரியன் படத்தை கொடுத்துள்ளார்களாம். ஏகே 62இன் தற்போதைய கதைக்கு பதிலாக இந்த கதையை எடுக்கலாம் என கூறியிருக்கார்களாம்.

ஆனால் இந்த கொரியன் படத்திற்கான கதை, வசனம் எல்லாம் எழுதுவதற்கு எப்படியும் மூன்றுமாத காலம் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய கதையையே எடுக்கலாம் என மகிழ்திருமேனி கூறுகிறாராம்.

இப்படியாக அஜித்தின் இந்த படம் இழுப்பறியில் இருக்கிறது. அனேகமாக இந்த முறை தல, தளபதி போட்டி இருக்காது என்றே கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *