லியோவ விடுங்க :ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் புஷ்பா!

லியோவ விடுங்க :ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் புஷ்பா!
  • PublishedApril 10, 2023

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,  ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான் புஷ்பா.

தமிழ்,  ஹிந்தி,  மலையாளம்,  கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில்’புஷ்பா -தி ரூல்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ யூ டியூபில் 64 மில்லியன் பார்வையாளர்களையும் 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *