“தலைவர் 171″ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு… கன்ஃபார்ம் செய்த லோகேஷ்

“தலைவர் 171″ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு… கன்ஃபார்ம் செய்த லோகேஷ்
  • PublishedDecember 18, 2023

மாநகரத்தில் அறிமுகமாகி கைதியின் வெற்றிக்குப் பின் இமயம் என உயர்ந்த லோகேசை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரும்பி பார்த்தனர். கமலஹாசன் உடன் இணைந்த விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் தொடர்ந்து விஜய் உடனான இரண்டாவது படம் லியோவை இறக்கினார்.

விஜய் உடன் லியோ சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே சூப்பர் ஸ்டாரை அணுகிய லோகேஷ் தனது அடுத்த படத்திற்கான விதையை போட்டுவிட்டார்.

தலைவரும் தர்பார், அண்ணாத்த என சிறிது தடுமாறி இருந்த நிலையில் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுத்தார். கதை தேர்வில் கவனமாக இருக்கும் ரஜினி, ஜெய் பீம் புகழ் ஞான வேலுடன் தலைவர் 170 ஆனா வேட்டையனை முடித்த கையோடு தலைவர் 171யை லோகேஷ் உடன் கன்ஃபார்ம் பண்ணிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான தலைவர் 171 இல் தவறு நேராதவாறு பயங்கரமாக ஸ்கெட்ச் போட்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வருகிறார் லோகேஷ்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகிவிட்டது.

லோகேசின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ள தலைவர் 171க்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *