அளவுக்கு அதிகமாக புகை விட்ட நடிகை ICU-க்கு போன கொடுமை…

அளவுக்கு அதிகமாக புகை விட்ட நடிகை ICU-க்கு போன கொடுமை…
  • PublishedDecember 18, 2023

தற்போது புகழின் உச்சியில் இருக்கும் அந்த அழகு நடிகை ஆரம்பத்தில் பார்ட்டி, பப் என ஜாலியாக லைப்பை என்ஜாய் செய்து வந்தார். அதனாலேயே அவருக்கு குடிப்பழக்கமும், சிகரெட் பழக்கமும் அளவுக்கு அதிகமாக இருந்திருக்கிறது.

ஒருமுறை அம்மணி இளம் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட ஒரு பார்ட்டிக்கு சென்று இருக்கிறார். அங்கு ஜோதியில் ஐக்கியமான நடிகை கழுத்து வரைக்கும் குடித்துவிட்டு பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டையும் ஊதி தள்ளி இருக்கிறார்.

அளவுக்கு அதிகமாக புகை விட்டதில் நடிகைக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்து மயங்கி இருக்கிறார். உடனே பதறிப்போன பிரபலங்கள் அவரை குண்டுகட்டாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். அதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையும் நடைபெற்றிருக்கிறது.

ஒரு வழியாக கண் முழித்த நடிகைக்கு இனிமேல் நீங்கள் புகை பிடிக்கக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். உடனே நல்ல பிள்ளையாக நடிகையும் அந்த பழக்கத்தை நிறுத்தி இருக்கிறார். இப்போது அவர் ஏதாவது பார்ட்டிகளில் கலந்து கொண்டால் கூட நடிகை லைட்டாக குடிப்பதோடு நிறுத்தி விடுகிறாராம்.

ஏனென்றால் ரயில் என்ஜின் மாதிரி போய்விட்டதில் நடிகைக்கு சில பல பின்விளைவுகளும் வந்திருக்கிறது. அதனாலேயே அவ்வப்போது உடல்நல பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாராம். ஏற்கனவே ஏகப்பட்ட காதல் தோல்வியில் இருந்த நடிகை புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்த போய் இப்போது பல பிரச்சனைகளை சுமந்து கொண்டு திரிகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *