ரஜினியை இயக்கும் லோகேஷ் : இத்தனை கோடி சம்பளமா?

ரஜினியை இயக்கும் லோகேஷ் : இத்தனை கோடி சம்பளமா?
  • PublishedApril 30, 2023

நடிகர் சூப்பர் ஸ்டார் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் 171 ஆவது படத்தில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்பதில் பலத்த போட்டியே நிலவியது. இந்நிலையில், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளி வந்திருந்தது.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு 115 கோடி சம்பளமும்,  லோகேஷுக்கு 40 கோடி சம்பளமும் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளது.

சில நடிகர்கள் இயக்குனருக்கு இவ்வளவு கோடி சம்பளம் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் அனைத்திலுமே வித்தியாசமானவர் தான். அதனாலேயே இந்த சம்பள விஷயத்தை எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *