லியோவிற்காக லோகேஷ் செய்த தரமான சம்பவம் : இது நம்ம லிஸ்டிலயே இல்லையே!

லியோவிற்காக லோகேஷ் செய்த தரமான சம்பவம் : இது நம்ம லிஸ்டிலயே இல்லையே!
  • PublishedMay 13, 2023

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிரடி  ஆக்சன் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய்க்காக ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

அதாவது பொதுவாக லோகேஷின் திரைப்படங்களில், பாடல் காட்சிகள் குறைவாக இருக்கும். ஆனால் விஜயின் இந்த படத்தில் ஒரு பிரமாண்டமான பாடல் காட்சியை வைத்திருக்கிறார். இந்த பாடலில் நடனமாடுவதற்காக 2000 டான்ஸர்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.

2000 டான்ஸர்கள் என்னும் பொழுது கண்டிப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் டான்ஸர்களையும் வர வைக்கலாம் என்று தயாரிப்பு குழுவும்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் தளபதி விஜய் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை டான்ஸர்கள் எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். ஆள் இல்லை என்றால் நடனப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *