தனது 8 வருட பிரேகப் பற்றி மனம் திறந்த சாந்தனு!

தனது 8 வருட பிரேகப் பற்றி மனம் திறந்த சாந்தனு!
  • PublishedMay 13, 2023

இயக்குனர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமான சாந்தனு இன்னும் வளர்ந்து வரும் ஒரு நடிகராகவே இருக்கிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய எட்டு வருட பிரேக் அப் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் கீர்த்தியும் இவரும் சிறு வயதிலிருந்து நண்பர்களாக பழகி பின் காதலிக்க ஆரம்பித்தது 2015 இல் திருமணமும் செய்துக் கொண்டார்கள்.

ஆனால் காதலிக்கும் காலத்தில் இவர்களுக்குள் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டை வந்து கொண்டே இருக்குமாம். அப்படித்தான் ஒரு முறை சிறு பிரச்சனை காரணமாக இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்திருக்கின்றனர்.

அப்போது சாந்தனு தன்னுடைய நீண்ட நாள் தோழியை எதார்த்தமாக சந்தித்து இருக்கிறார். அதை தொடர்ந்து இருவரும் காபி ஷாப்பில் மீட் செய்து கேஷுவலாக பேசினார்களாம். இதை அந்த காபி ஷாப்பிற்கு வந்திருந்த கீர்த்தியின் தோழி பார்த்துவிட்டு சரியாக அவரிடம் பற்ற வைத்திருக்கிறார். ஏற்கனவே சாந்தனு மேல் அவர் ஏகப்பட்ட கடுப்பில் இருந்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இயல்பாகவே ஒரு பொசசிவ் குணமும் அவருக்கு இருந்திருக்கிறது. அதனால்  இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி இருவரும் மன நிம்மதி தான் முக்கியம் என்று பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்களாம். இப்படி 8 வருடம் கழிந்த நிலையில் அவ்வப்போது ஹாய் பாய் சொல்வதோடு அவர்களின் நட்பு தொடர்ந்திருக்கிறது.

அப்பொழுதுதான் ஒரு முறை டான்ஸ் ஷோவுக்காக ரிகர்சல் செய்த போது இவர்களுக்குள் மீண்டும் காதல் பற்றி இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *