லோகேஷ் கனகராஜின் ரொமான்ஸ் பற்றி ஆண்ட்ரியா இப்படி சொல்லிட்டாங்களே…

லோகேஷ் கனகராஜின் ரொமான்ஸ் பற்றி ஆண்ட்ரியா இப்படி சொல்லிட்டாங்களே…
  • PublishedMarch 27, 2024

ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் செய்து நடித்ததை பார்த்து மாஸ்டர் படத்தின் நடிகை ஆண்ட்ரியா அடித்த கமெண்ட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே காதல் காட்சிகள் பெரிதும் இருக்காது. மேலும், காதலை பிரித்து விடுவார். காதலர்களில் ஒருவரை போட்டு தள்ளி விடுவார்.

விக்ரம் படத்தில் உச்சகட்டமாக பகத் ஃபாசிலின் காதலியாக நடித்த காயத்ரியின் தலையை விஜய்சேதுபதி அறுத்து போட்டு விடும் காட்சி பதை பதைக்க வைத்திருக்கும்.

இவருக்கு மனநலம் சரியில்லை என்றும் இவர் ஒரு சைக்கோ என்றும் கூட இவர் மீது வழக்கு தொடரப்பட்ட காமெடிகள் எல்லாம் நடந்தது.

இந்த நிலையில், ராஜ்கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து டூயட் பாடி அவரை கட்டிப் பிடித்து உருண்டு புரண்டு நடித்த நடிப்பை பார்த்து டோட்டல் தமிழ் சினிமாவே ஷாக்காகி கிடக்கிறது.

விக்ரம் படத்தில் தன்னுடைய கழுத்தை அறுத்து காதலுக்கு வேட்டு வச்சுட்டு இதெல்லாம் நியாயமாரே என லோகேஷ் கனகராஜை பார்த்து நறுக்கென கேள்வி எழுப்பி இருந்தார் காயத்ரி.

இந்நிலையில், அவரை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்த ஆண்ட்ரியாவும் லோகேஷின் ரொமான்ஸ் பற்றி பேசியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்த ஆண்ட்ரியா அடுத்ததாக ‘கா’ படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் ஆண்ட்ரியாவிடம் லோகேஷ் ரொமான்ஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

“அவர் கதை எழுதும் போது இந்த ரொமான்ஸ்லாம் வரலையா.. அப்படின்னு நான் சொல்லல அந்த பாடல் டீசரின் கமெண்ட் பக்கத்தில் பார்த்தேன்” என நைசாக எஸ்கேப் ஆகி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *