சித்தார்த் – அதிதி திடீர் திருமணம்? எங்க எப்போனு உங்களுக்கு தெரியுமா?

சித்தார்த் – அதிதி திடீர் திருமணம்? எங்க எப்போனு உங்களுக்கு தெரியுமா?
  • PublishedMarch 27, 2024

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில், ரகசியமாக இன்று திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சித்தார்த் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் படத்தில் அதிதி ராவ் ஹைதரியுடன் இணைந்து நடித்தார்.

அதன் பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடிக்கடி சோஷியல் மீடியாவில் காதல் ஜோடிகள் வெளிப்படுத்தி வந்த நிலையில், பிரபலங்கள் பலரையும் அழைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொள்ளாமல் ரகசியமாக செய்துள்ளதாக கூறுகின்றனர்.

நடிகர் சித்தார்த் ஏற்கனவே 2003ம் ஆண்டு மேக்னா நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2007ம் ஆண்டு சித்தார்த்துக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன் பின்னர், நடிகை சமந்தாவை சித்தார்த் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவின. நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அந்த கிசுகிசுக்கள் அடங்கின.

37 வயதாகும் நடிகை அதிதி ராவ் சித்தார்த்தை காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அவருக்கும் இது இரண்டாவது திருமணம் தான். ஏற்கனவே 2009ம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ் 2013ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதிதி ராவின் தாய் வழி தாத்தா வனபர்த்தி சமஸ்தானத்தின் கடைசி அரசர் என்பது குறிப்பிடத்தகது. அதன் காரணமாகத்தான் இன்று வனப்பர்த்தியில் உள்ள அதிதி ராவின் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி திருக்கோயிலில் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளதாக உள்ளூர் மீடியாக்கள் உறுதி செய்துள்ளன.

ஆனால், நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் இதுவரை தங்கள் திருமணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் திருமண புகைப்படங்களை வெளியிடுகிறார்களா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *